முதியவர் உயிர்மாய்ப்பு : வெள்ளவத்தை கடற்கரையில் சடலம் மீட்பு!
போஸ்வெல் பகுதிக்கு அருகிலுள்ள வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தெஹிவளைப் பகுதியில் உயிர்மாய்ப்பு செய்துகொள்ளும் நோக்கில் கடலில் குதித்ததாகக் கூறப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 70 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பு
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த நபரின் உறவினர்கள் உடலை அடையாளம் கண்டுள்ளனர்.

விசாரணையில் குறித்த நபர் உயிரிழப்பதற்கு முதல் நாள் தனது பிள்ளைகளுடன் சாப்பிட்டு மகிழ்ந்திருந்தது தெரிய வந்தது.
அவர் வெளியே சென்றபோது தனது கைக்கடிகாரத்தையும் ஒரு ஜோடி காலணிகளையும் வீட்டில் விட்டுச் சென்றதாக நெருங்கிய உறவினர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து வெள்ளவத்தை காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.