கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு!

கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு!

உடன் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலையை உயர்த்துவதற்கு உரிய நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இதற்கமைய ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின்  விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாத இறுதியிலும் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.