வாகன விபத்தில் உயிரிழந்த மாணவர்

வாகன விபத்தில் உயிரிழந்த மாணவர்

அனுராதபுரம் - பாதெனிய வீதி கல்கமுவ - புதுறுவகந்த பிரதேசத்தில் இன்று மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாடசாலை மாணவர் பயணித்துள்ள உந்துருளி பாரவூர்த்தி ஒன்றுடன் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

மாணவர் பாடசாலை நிறைவடைந்து தனது தந்தையுடன் உந்துருளி பழுதுபார்க்கும் நிலையத்திற்கு சென்று  மீண்டும் உந்துருளியில் தனியாக பயணித்து கொண்டிருந்த போது குறித்த விபத்து நேர்ந்துள்ளது.