கொக்காவில் பகுதியில் அதிகாலை கோர வி*பத்து! காரில் இருந்த இருவர் இறங்கியதால் உயிர்தப்பினர்!
முல்லைத்தீவு – கொக்காவில் பகுதியில் இன்று (நவம்பர் 10) அதிகாலை இடம்பெற்ற கார் – பாரவூர்தி விபத்தில் கார் பலத்த சேதமடைந்துள்ளது.
A9 வீதியில் பயணித்த கார் ஒன்று கொக்காவில் பகுதியில் வீதியோரமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன்போது, காரில் பயணித்த இருவர் சிறுநீர் கழிப்பதற்காக வாகனத்திலிருந்து கீழே இறங்கியுள்ளனர்.
அந்த நேரத்தில், A9 வீதியில் அதிவேகமாக வந்த பாரவூர்தி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, மோதல் இடம்பெற்ற சமயத்தில் காரில் இருந்த இருவரும் வெளியேறியிருந்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.