மாத்தறை - தெவிநுவர பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
மாத்தறை - தெவிநுவர பகுதியில் ஹெரோயின், அயிஸ், கஞ்சா போதைப்பொருட்கள் மற்றும் மதுபானங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவற்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைவாக முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து ஒருகிராம் 50 மில்லிகிராம் ஹெரோயின், 15 கிராம் அயிஸ், 85 கிராம் கஞ்சா மற்றும் 15 மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
தெவிநுவர பகுதியைச்சேர்ந்த 23 வயதுடைய குறித்த சந்தேகத்திற்குரியவரை இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.