சந்திரிகா வகுக்கும் புதிய வியூகம்

சந்திரிகா வகுக்கும் புதிய வியூகம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நடவடிக்கைகளால் விரக்தியடைந்தவர்களை இணைத்து தனியான அணி ஒன்றை உருவாக்கும் பணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஈடுபட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இவர் இணையத்தளத்தில் ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார்.

இவ்வாறு ஒருங்கிணைக்கப்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பின் வரிசை அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களுடன் இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே கலந்துரையாடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.