சற்று முன்னர் மேலும் ஒருவருக்கு கொரோனா....!

சற்று முன்னர் மேலும் ஒருவருக்கு கொரோனா....!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2985 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 2984 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.

குறித்த நபர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பியர் என கூறப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2830 ஆக காணப்படுகின்றது.

அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 143 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வடைந்துள்ளது.