
நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி....!
நாட்டில் நேற்றைய தினம் 3 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
பிரித்தானியா, ஐக்கிய அரபு இராச்சியம், குவைட் முதலான நாடுகளில் இருந்து நாடுதிரும்பிய மூன்று பேருக்கே கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 989 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேநேரம், நாட்டில் நேற்றைய தினம் 12 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 842 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 135 ஆக குறைவடைந்துள்ளது.