மாணவனை கொடூரமாகத் தாக்கிய தனியார் கல்வி நிலைய ஆசிரியர்!
முல்லைத்தீவு விசுவமடு மகாவித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்விகற்கும் மாணவன் ஒருவன் தனியார் கல்வி நிலைய ஆசிரியரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் பிரமந்தனாறு நாதன் திட்டத்திலுள்ள தனியார் கல்விநிலையத்திலேயே நடைபெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த தனியார் கல்வி நிலையத்தில் பரீட்சை நடத்தப்பட்டது. அதில் அந்த மாணவன் கூறைந்த பெறுபேறு பெற்றமை காரணமாகவே மாணவனை ஆசிரியர் கண்மூடிதனமாக தாக்கியுள்ளார்.
இதன் காரணமாக பலத்த காயங்களுக்குள்ளான மாணவன் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதனையடுத்து மேலதிக சிகிச்சைகாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளார் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மாணவனைத் தாக்கிய ஆசிரியருக்கு எதிராக தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.