சர்வதேச ஜனநாயக தினம் இன்று

சர்வதேச ஜனநாயக தினம் இன்று

உலகின் ஜனநாயகத்தை மீளாய்வு செய்வதற்காக சர்வதேச ஜனநாயக தினம் வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர்மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனநாயகத்தை பாதுகாத்துள்ள நாட்டின் பிரதமராக சர்வதேச ஜனநாயக தினத்துக்கு செய்தி வெளியிடுவது மகிழ்வுக்குரியது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை பலப்படுத்தவும், உறுதிப்படுத்தவும் உலக நாடுகளை ஒன்றுப்படுத்தவும் 2007 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதியை சர்வதேச ஜனநாயக தினமாக பிரகடனப்படுத்தியது.

மனித குலத்தின் ஜனநாயக உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அவர்களின் வாழ்க்கையில் சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சி அத்துடன் கிடைக்கப் பெறவேண்டிய உரிமைகள் ஜனநாயக ரீதியில் அனைவருக்கும் கிடைக்கப் பெற வேண்டும் எனவும் பிரதமர் வெளியிட்டுள்ள ஜனநாயக தின வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.