
வீதி சட்டத்தை மீறினால் தண்டனையில்லை கட்டாய வகுப்பு: வருகின்றது புதிய நடைமுறை !
வீதி ஒழுங்கை சட்டத்தை மீறுவோருக்கு தண்டப்பணம் அறவிடப்போவதில்லை எனவும் கட்டாய ஆலோசனை வகுப்புகளுக்கு அவர்கள் அனுப்பப்படுவர்கள் என போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு நகரத்தில் வீதி ஒழுங்கை மீறும் சாரதிகள் சிசிரீவி பொறிமுறை, மொபைல் பிரிவுகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு அடையாளம் காணும் சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
வீதி ஒழுங்கு குறித்த நடைமுறைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படும் வீதி ஒழுங்கை பரீட்சார்த்த முயற்சிகள் வெற்றியளித்துள்ளன என என போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதிப்பாதுகாப்பு பிரிவு எஸ்.எஸ்.பி.இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டெம்பர் 14ஆம் திகதி தொடங்கப்பட்ட நான்கு ஒழுங்கை வீதிச் சட்டம் ஓர் ஒத்திகை நடவடிக்கையாகும். போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சாரதிகளை அடையாளம் காணவும் அறிவுறுத்தவும் இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டது.
முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு பேருந்துப் பாதையில் அதிக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
வீதி ஒழுங்கைச் சட்டமானது அனைத்து வீதிகளிலும் பின்பற்றப்படும். பிரதானமாக ராஜகிரிய, பொரளை மற்றும் காலி வீதி ஆகியவற்றிலிருந்து கொழும்பு நகரத்துக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும்.
ஸ்ரீலங்காவில் அனைத்து சாரதிகளும் போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என இலங்கை பொலிஸின் போக்குவரத்து நிர்வாக மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் டி.ஐ.ஜி சுமித் நிசங்க தெரிவித்துள்ளார்.