சைபர் தாக்குதல்களுக்குள் நானும் அகப்பட்டேன்! ஆபத்தான குற்றம் - நாமல் தகவல்
சைபர் மிரட்டல் மிகவும் கடுமையான குற்றம் என்று குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச சைபர் இணைய ஊடுறுவல் தாக்குதலுக்கு தானும் அகப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
சைபர் மிரட்டலைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய முயற்சிகள் குறித்து நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி மற்றும் பிற முக்கிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து,
சைபர் இணைய ஊடுறுவல் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவு செய்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது,
“சைபர் மிரட்டல் மிகவும் கடுமையான குற்றம். அதனை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொள்ள வேண்டும். சைபர் இணைய ஊடுறுவலில் அனைவரும் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.
இந்த இணைய ஊடுருவலில் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே தான் அதன் தாக்கத்தை என்னால் புரிந்துக்கொள்ள முடிகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.