100 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

100 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

கொழும்பு-கெசெல்வத்த பகுதியில் 100 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, 600 கிராம் கேரள கஞ்சாவுடன் சிற்றூர்தி ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த சந்தேக நபர் ஒருவர் பானதுறை-ஹொரேதுடுவ பாலத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் முச்சக்கரவண்டியொன்றில் ஐஸ் ரக போதைப்பொருள் 50 கிராம் மற்றும் 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சென்றுக்கொண்டிருந்த நபரொருவரையும் காவல்துறையினர் தெஹிவளை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.