
சுகாதார அமைச்சு கொரோனா பரவல் குறித்து மேற்கொண்டுள்ள தீர்மானம்!
நாட்டில் கொரோனா தொற்று குறித்த சுகாதார நடைமுறைகள் முறையாக பின்பற்றுகிறதா என்பதை கண்காணிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களினூடாக இவற்றை கண்காணிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதேவேளை, நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில், சமூகத்தின் மத்தியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கும் சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.