
ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது!
ஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதன்படி, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 91ஆக உள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலத்தில் 8,246பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 143பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 5 இலட்சத்து 37 ஆயிரத்து 210பேர் பாதிப்படைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 245,580 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 284,539பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகமான எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டுள்ள போதும், அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இது பெரும்பாலான நாடுகளின் மத்தியில் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.