திமுகவின் பொதுச்செயலாளர் போல் பேசி வருகிறார் இபிஎஸ் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
கோவை விமான நிலையத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி மிகவும் ஆபாசமாக பேசுகிறார்.
* எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் விஜய் மீது தனிப்பட்ட விமர்சனங்களை செய்து வருகிறார்.
* தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மட்டுமே பிரசாரம் செய்கின்றனர்.
* இன்றைய அதிமுக எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டது போல் இல்லை.
* வெறும் 10% வாக்கு வங்கி உள்ள கட்சியாக தற்போது உள்ளது.
* இபிஎஸ்-ஐ விட்டு அதிமுக முன்னாள் அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் விலகியது ஏன்?
* கடந்த சட்டசபை தேர்தலில் இபிஎஸ்-ன் நடவடிக்கையை அதிமுகவினர் ஏற்கவில்லை.
* அம்மாவிடம் விசுவாசமாக இருந்தவர்கள் அதிமுகவில் இருந்து விலகி உள்ளனர்.
* அம்மா இருந்தபோது கொங்கு மண்டலத்தில் 50 இடங்களில் வென்ற அதிமுக தற்போது ஏன் வெற்றி பெறவில்லை?
* கொங்கு மண்டலத்தில் அம்மா இருக்கும் வரை அதிமுக வலுவாக இருந்தது.
* வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மாறி உள்ளனர்.
* பாமக இல்லை என்றால் 47 தொகுதிகளில் அதிமுக வென்றிருக்க முடியாது.
* தன்னை உயர்த்தியே நிர்வாகிகளை வெளியேற்றியவர் இபிஎஸ்.
* தவெக வேட்பாளர்களை விலைக்கு வாங்கிய பிறகே எடப்பாடி பழனிசாமியால் வெற்றி பெற முடிந்தது.
* பாமகவின் உறுதுணையுடன் சேலத்தில் 7 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது.
* தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்களையும் இழிவான பிரசாரத்தையும் மக்கள் புறக்கணிப்பார்கள்.
* அதிமுக டிரஸ்ட்டின் சொத்துக்களை கைப்பற்றும் நோக்கில் மிதுனை கொண்டு வந்துள்ளனர்.
* திமுகவின் பொதுச்செயலாளர் போல் பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி
* அதிமுகவை மகன் மிதுனிடம் அடகு வைக்க எடப்பாடி பழனிசாமி வேலை செய்து வருகிறார்.
* பெண்களை மையப்படுத்தி ஆபாசமாக பேசுவது தான் திமுகவின் வாடிக்கை.
* கொங்கு மண்டலத்தில் வளர்ச்சி முகமாக முதலமைச்சர் விஜய் இருப்பார்.
* தாராபுரத்தில் தவெக மிகப்பெரிய வெற்றி பெறும்.
* ஆபாசமாக பேசுபவர்களை மக்கள் தூக்கி எறிவார்கள்.
* கொங்கு பகுதி மக்கள் அனைவரும் ஊழலற்ற நிர்வாகம் வேண்டும் என எண்ணுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.