
கம்பஹா மாவட்டத்தின் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..!
உடனடியாக அமுலாகும் வகையில் கம்பஹா காவற்துறை தொகுதிக்கும், களனி வலத்திற்கு உட்ப்பட்ட கந்தானை மற்றும் ஜா-எல காவற்துறை பிரிவுகளுக்கும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் கம்பஹா மாவட்டத்தின் 14 காவற்துறை பிரிவுகளுக்கும் ஊரடங்கு சட்டம் அமுல்ப்பட்டுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
காவற்துறை தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய கம்பஹா, கனேமுல்ல, கிரிந்திவெல, தொம்பே, மல்வத்துஹிரிப்பிட்டிய, மீரிகம, நிட்டம்புவ, பூகொட, வெயாங்கொடை, மினுவங்கொட, வீரங்குல, வெலிவேறிய, பல்லேவெல மற்றும் யக்கல ஆகிய காவற்துறை பிரிவுகளுக்கு இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்பட்டுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, திவுலப்பிட்டிய காவற்துறை பிரிவுக்குற்ப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.