எங்கள் ஆட்சியில் ஆக்டிங் கிடையாது, ஆக்ஷன் மட்டுமே!- சட்டமன்றத்தில் திமுக - தவெக சுவாரசிய விவாதம்!

எங்கள் ஆட்சியில் ஆக்டிங் கிடையாது, ஆக்ஷன் மட்டுமே!- சட்டமன்றத்தில் திமுக - தவெக சுவாரசிய விவாதம்!

திமுக ஆட்சியில் 18 மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டன.

சட்டசபையில் இன்று 2வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்,"திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஒரு போராட்டம் கூட நடத்தியது இல்லை" என்றார்.

இதற்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

அமைச்சர் ரமேஷ்:   திரைக்கதையை தயார் செய்கிறார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்ததாக சிறந்த திரைக்கடை எழுதி உள்ளார். கிடங்குகள் வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.

ரூ.309 கோடிக்கு நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என்ற திமுக வாக்குறுதி என்னாச்சு?

நெல்லுக்கும் கரும்புக்கும் அரசு ஒரு விலை நிர்ணயித்தால் அதிகாரிகள் ஒரு விலை நிர்ணயித்தார்களே அது தெரியாதா?

திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தார்களா? துன்பப்பட்டார்களா? என்பது அவர்களுக்கே நன்றாக தெரியும்.

மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்வதற்காக கரும்பு தோட்டத்திற்குள் கான்கிரீட் போட்டு நடந்த விவசாயியை எம்ஆர்கே பன்னீர்செல்வம்  மறந்துவிட்டார்.

திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட நெல் சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு முன்னாள் அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்தார்.

அமைச்சர் ரமேஷ்:  அந்த டெக்னிக்கை 10 நிமிடங்கள் முன்பு தான் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கற்றுக்கொண்டேன்.

எம்ஆர்கே பன்னர்செல்வம்:  விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை நிறுத்த போகிறதா அரசு? நுண்ணீர் பாசனத்திட்டம், மும்முனை மின்சாரம் திட்டத்திற்கு கடந்த ஆட்சியை விட குறைவான நிதி ஒதுக்கீடு ஏன்?

வேளாண் துறைக்கு திமுக ஆட்சியை விட ரூ.279 கோடி குறைத்து நிதி ஒதுக்கி உள்ளது தவெக அரசு. திமுக ஆட்சியில் வேளாண் துறைக்கான செலவை விட கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

திமுக ஆட்சியை விட தவெக ஆட்சியில் வேளாண் துறைக்கு ரூ.481 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சாமி அமைச்சர்

அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை சாமி அமைச்சர் என எம்ஆர்கேபி கூறியதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. அப்போது, முதலமைச்சர் விஜயும் சிரித்தார்.