கொரோனா வைரஸ் தொற்றியதாக சந்தேகம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

கொரோனா வைரஸ் தொற்றியதாக சந்தேகம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதென சந்தேகம் இருந்தால் அது தொடர்பில் அச்சம் கொள்ளாமல் உடனடியாக சுகாதார பிரிவினருக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, சுகாதாரப் பிரிவினரால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் உரிய முறையில் பின்பற்றப்படாமை காரணமாக நாட்டினுள் மீண்டும் கொரோனா பரவ ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.