மீனவருக்கு கொரோனா - மூடப்பட்டது துறைமுகம்
நீர்கொழும்பு டிக்கோவிட்ட துறைமுகத்தில் மீனவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஐந்து மீனவர்களுடன் இவர் கடலில் படகில் தங்கியிருந்த வேளை காய்ச்சல் அறிகுறிகளுடன் காணப்பட்டார்.இதனையடுத்து இன்றையதினம் அவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை அதிகாரிகள் டிக்கோவிட்ட துறைமுகத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.