
கம்பஹாவில் ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான செய்தி
கம்பஹாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
எனினும், குறித்த 18பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட சதோச பல்பொருள் அங்காடிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்பட உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அண்மையில் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து மேலும் பலர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையிலேயே கடந்த திங்கட்கிழமை முதல் கம்பஹா மாவட்டத்தில் 18பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.
அதாவது, சுகாதார பரிந்துரைகளுக்கு அமைவாக காலை 8மணி முதல் இரவு 8மணி வரையில் சதோச, பல்பொருள் அங்காடிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.