இன்று முதல் Seat belt அணிவது கட்டாயம்!

இன்று முதல் Seat belt அணிவது கட்டாயம்!

 தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) இன்று (ஜூலை 1) முதல் பேருந்து ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்று அறிவித்துள்ளது என்று தேசிய போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் நயோமி ஜெயவர்தன தெரிவித்தார்.

மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் விதிகளின் கீழ் பேருந்து ஓட்டுநர்களுக்கு சீட் பெல்ட் கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவிப்பு 2001இல் வெளியிடப்பட்ட போதிலும், அது பல ஆண்டுகளாக முறையாக அமுல்படுத்தப்படவில்லை என்று கூறினார்.

இன்று முதல் Seat belt அணிவது கட்டாயம்! | Seat Belt Is Mandatory On Expressways Srilanka

2025 ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல், அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் Seat belt அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதோடு இலகுரக வாகனங்களில் அனைத்து பயணிகளுக்கும், 2025 செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வித வாகனங்களின் அனைத்து இருக்கைகளிலும் பயணிக்கும் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.