சடலமாக மீட்கப்பட்ட காவற்துறை காண்ஸ்ரபிள் காதல் விவகாரத்தினால் தற்கொலையா..?
சடலமாக மீட்கப்பட்ட காவற்துறை காண்ஸ்ரபிள் காதல் விவகாரத்தினால் தற்கொலை செய்து கொண்டிருக்க கூடும் என சந்தேகிக்கப்பட்டுள்ளது.
UPDATE..........
சிலாபம் மாதம்பை காவற்துறையில் பணிபுரியும் காவற்துறை காண்ஸ்ரபிள் ஒருவர் அந்த காவல்துறை நிலையத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 2 மணியளவில் அவர் சடலமாக மீட்கப்பட்டார் என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
26 வயதுடைய குறித்த காவற்துறை காண்ஸ்ரபிள்இ யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. அவரது மரணம் கொலையா? அல்லது தற்கொலையா என்பது இதுவரையில் உறுதிசெய்யப்படாத நிலையில் உயிரிழந்தவரின் கையடக்க தொலைபேசியில் உள்ள தகவல்களின் அடிப்படையில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.