ஒரே நாளில் 61 மில்லியன் ரூபாய் வருமானம்
இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து மூலம் ஒரே நாளில் 61 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி நேற்று மாலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் 170,000க்கும் அதிகமான வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியுள்ளன.

அதேசமயம் அதற்கு முந்தைய நாளிலும் (நேற்று முன்தினம்) 170,069 வாகனங்கள் பயணித்திருந்ததுடன், அதன் மூலம் 61.7 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
இந்நிலையில் கிருஸ்துமஸ் மற்றும் புதுவருட பண்டிகைக் காலம் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல் அதிகமாகக் காணப்படுவதால், பயணிகள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.