
சீனாவில் 5 நாட்களில் 9 மில்லியன் மக்களுக்கு PCR பரிசோதனைளை மேற்கொள்ள திட்டம்
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சீனாவின் குவின்டாம் நகரில் உள்ள 9 மில்லியன் மக்களுக்கு PCR பரிசோதனைகளை மேற்கொள்ள அந்நாட்டு சுகாதார பிரிவினர் தீர்மானித்துள்ளனர்.
குறித்த பரிசோதனைகளை ஐந்து நாட்களுக்குள் நிறைவு செய்தவற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கு முன்னதாக சீனாவின் வுஹான் நகரில் 11 மில்லியன் மக்களுக்கு 10 நாட்களில் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.