மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவன்

மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவன்

கணவன் தனது மனைவியை தீ வைத்து எரித்துக் கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (13) பரசன்கஸ்வெவ - மெதகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் பரசன்கஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.

பரசன்கஸ்வெவ காவல்துறையினர் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவன் | Husband Burns Wife Alive To Death

குடும்பத் தகராறு காரணமாகவே கணவன் இந்தக் கொலையைச் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பரசன்கஸ்வெவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.