
அதிபர் ட்ரம்ப் - போரிஸ் ஜோன்சன் முக்கிய பேச்சு: அமெரிக்க தேர்தலில் நெருக்கம் காட்டும் பிரித்தானியா
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பிடனுக்கு பிரித்தானிய அரசு நெருக்கம் காட்டி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், கடந்த வாரம் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை தொடர்பு கொண்டு நலம் விசாரித்திருந்தார்.
இருப்பினும் பிரித்தானிய அரசாங்கம் ஜனநாயகக் கட்சி வேட்பாளருடன் தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாக பேசப்படுகிறது.
அமெரிக்க ஊடகங்கள் வெளியிடும் மக்கள் மனநிலை மற்றும் கருத்துக்கணிப்புகளில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலை பெற்று வருகிறார்.
கருத்துக்கணிப்புகள் அனைத்திலும் ஜனாதிபதி ட்ரம்பை விட ஜோ பிடன் 9.8 சதவீதம் முன்னிலையில் உள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்புடன் நேரடியாக ஜோ பிடன் முன்னெடுத்த முதல் விவாதமானது ஜனநாயக கட்சிக்கே சாதகமான சூழலை ஏற்படுத்திய நிலையில், இரண்டாவது நேரடி விவாதத்தை ட்ரம்ப் தரப்பு ரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.