பாடசாலை போக்குவரத்து சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து இன்று விசேட கலந்துரையாடல்
எதிர்வரும் ஜூலை மாதத்தில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்க தீர்மானித்துள்ள நிலையில் பாடசாலை போக்குவரத்து சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை கல்வி அமைச்சில் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் மஹிந்த அமரவீர, கல்வி மற்றும் போக்குவரத்து அமைச்சின் பல அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பமாகும்போது சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.