ரிசாட் பதியுதீனை கைது செய்வதற்கு பிடியாணை அவசியமற்றது...!

ரிசாட் பதியுதீனை கைது செய்வதற்கு பிடியாணை அவசியமற்றது...!

பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபரை கைது செய்வதற்கு நீதிமன்ற பிடியாணை அவசியமற்றது என கோட்டை நீதவான் பிரியந்த லியனகே குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் உள்ளிட்ட சந்தேக நபர்கள் மூவரை கைது செய்ய பிடியாணை ஒன்றை பிறப்பிக்குமாறு குற்றப்பு புலனாய்வு திணைக்களம் முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே நீதவான் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது புத்தளத்திலிருந்து மன்னாரிற்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் வாக்காளர்களை அழைத்து சென்ற குற்றச்சாட்டுக்கு அமைவாக பிடியாணை ஒன்றை பெற்று ரிசாட் பதியுதீனை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் மற்றும் பதில் காவல் துறை மா அதிபருக்கு குற்றப்புலனாய்வு பிரிவினருகு்கு அறிவித்தமைக்கு அமைய இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் நீதவான் இதனை அறிவித்துள்ளார்.