
சுற்றாடல் பாதிப்பு தொடர்பில் அறிவிக்க புதிய இலக்கங்கள் அறிமுகம்
சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதத்தை குறைக்க புதிதாக மூன்று தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, சுற்றாடல் அமைச்சிற்கு 1991 என்ற இலக்கத்தின் ஊடாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையுடனும், 1921 என்ற இலக்கத்தின் ஊடாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகங்களுடன் தொடர்புகொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரின் 0707555666 என்ற தனிப்பட்ட இலக்கத்திற்கு வாட்ஸ்அப் செய்தி அல்லது குறுஞ்செய்திகளின் ஊடாக சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து காணொளி மற்றும் தகவல்களை பகிர்ந்துக்கொள்ள முடியுமெனவும் சுற்றாடல் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.