404 பேர் கைது..
மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் மாலை 6 மணி தொடக்கம் இன்றைய தினம் அதிகாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட்ட 404 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெரோயின் போதை பொருடன் கைது செய்யப்பட்டவர்களில் 170 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதன்போது 143 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் கஞ்சா போதை பொருளை கைவசம் வைத்திருந்த 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை ஐஸ் ரக போதை பொருளை கைவசம் வைத்திருந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவற்துறைமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.