பிரச்சினைக்கு பூரணமாக தீர்வை காண்பதற்காகவே ஆதரவு
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது தமிழ் மக்களுடைய அடிப்படை அபிலாஷைகளை முழுமையாக நிறைவேற்ற கூடிய வகையில் செயற்பட்டால் மாத்திரமே புதிய அரசாங்கத்திற்கு 3 இல் 2 பெரும்பான்மையை வழங்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசிய பிரச்சினைக்கு பூரணமாக தீர்வை காண்பதற்காகவே இந்த ஆதரவை வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.