முகக்கவசம் தொடர்பில் நாடாளுமன்றில் வாதப்பிரதிவாதங்கள்...!

முகக்கவசம் தொடர்பில் நாடாளுமன்றில் வாதப்பிரதிவாதங்கள்...!

நாட்டில் நிலவுகின்ற கொரோனா சூழ்நிலை தொடர்பில் நாடாளுமன்றில் இடம்பெற்ற வாதபிரதிவாதங்கள்.

முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியினை கடைபிடிக்காதவர்கள் 2 ஆயிரம் ரூபாவிற்கு குறையாமலும் 10 ஆயிரம் ரூபாவிற்கு அதிகரிக்காமலும் அபராதம் செலுத்த வேண்டும் என வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றில் அது பின்பற்றப்படாமை ஏன், சபாநாயகரே நீங்களும் முகக்கவசம் அணியவில்லையே இந்த நிலைமை ஏன் என எதிர்கட்சி தலைவர் வினவினார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் நான் உரையாற்றுவதற்காக முகக்கவசத்தை அணியவில்லை என்றார். இதன்போது குறுக்கிட்ட சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, பொது இடம் என குறிப்பிடப்பட்டுள்ளமையானது நாடாளுமன்றிற்கு வெளியேயான சூழல் ஆகும் என்றார்.

மீண்டும் உரையாற்றிய எதிர்கட்சி தலைவர், நாடாளுமன்றில் ஒரு சட்டம் அதற்கு வெளியே பிரிதொரு சட்டமா என கேள்வி எழுப்பியமையை தொடர்ந்து விவாதம் பரபரப்பை எட்டியது.

இது தொடர்பான காணொளி கீழே பதிவேற்றப்பட்டுள்ளது.