
பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் PCR பரிசோதனை
பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையில் கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அலரிமாளிகைக்குள் கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக இது செய்யப்படுகின்றதாக அலரிமாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.