போலாந்து நாட்டு ஜனாதிபதிக்கும் கொரோனா தொற்று
போலாந்து நாட்டு ஜனாதிபதி எம்ட்ரேட் டுடாவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், 48 வயதுடைய போலாந்து ஜனாதிபதியின் உடல்நிலை தற்போது சீரான நிலையில் இருநப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி காரியாலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக போலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது.
அங்கு நேற்றைய தினத்தில் மாத்திரம் 13,600 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.