
ருமேனியா மற்றும் ஸ்பைனில் நிறுவப்படவுள்ள இலங்கைத் தூதரகம்
ருமேனியா மற்றும் ஸ்பைன் நாடுகளில் இலங்கைக்கான தூதரகங்களை திறப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவையில் அனுமதி கிடைத்துள்ளது
வெளிவிவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ருமேனியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவு 1957ஆம் ஆண்டு முதல் தொடரப்பட்டு வந்துள்ளன. ஸ்பைன் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவு 1995ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி, அந்த நாடுகளுடனான உறவினைப் பலப்படுத்திக் கொள்ளும் நோக்குடன் இலங்கைக்கான தூதரகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.