ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட நால்வர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட நால்வர் கைது

மாத்தறை பிரதேசத்தில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர் இன்று (28) பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

மாத்தறை இராணுவ முகாமின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மாத்தறை மாவட்ட போதை ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட பெண் 25 வயதுடையவர் என்பதோடு, அவரிடமிருந்து 325 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து மாத்தறை-குடாவ பகுதியில் வசிக்கும் 38 வயதுடைய மற்றொரு பெண்ணும் கம்புருகம பகுதியில் வசித்து வரும் 27 மற்றும் 27 வயதுடைய இரண்டு இளைஞர்களும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட அனைவரையும் மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.