நுவரெலியாவில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நுவரெலியாவில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நுவரெலியா மாவட்டத்தில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் 13 பேர் பேலியகொட மீன் விற்பனை நிலையத்திலிருந்து வருகைதந்தவர்கள் மற்றும் 11பேர் அவர்களுடன் தொடர்பு வைத்திருந்த குடும்பத்தவர்களாவர்.

மேலும் 9 பேர் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையுடன் தொடர்புடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர்.

1041 பேரை தனிமைப்படுத்தி இதுவரைக்கும் 760 பேருக்கு பிசி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட சுகாதார திணைக்கள விசேட வைத்தியர் இமேஷ் பிரதாப் ஷிங் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நுவரெலியாவிற்கு எவரும் சுற்றுலா பயணமாக வருகை தரவேண்டமெமென மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.