யாழ் நகரில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

யாழ் நகரில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

யாழில் (Jaffna) போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (15) யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பொம்மைவெளி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம் காவல்துறை நிலைய போதை தடுப்பு பிரிவினர் குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

இதன்போது கைதானவர்களிடம் இருந்து 15 க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் 50 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ் நகரில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள் | Police Arrests Three Tamil Youths In Jaffna

கைதானவர்கள் 18,19 மற்றும் 21 வயதுடையவர்கள் என காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.