யாழ் நகரில் அதிரடி கைதான பாடசாலை மாணவன் ; சுற்றிவளைப்பில் அம்பலமான விடயம்

யாழ் நகரில் அதிரடி கைதான பாடசாலை மாணவன் ; சுற்றிவளைப்பில் அம்பலமான விடயம்

யாழ்ப்பாண நகரில் பொலிஸார் நடத்திய விசேட சுற்றிவளைப்பு சோதனையின் போது 17 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளிட்ட பத்து பேர் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் நேற்று (23) காலை நடத்திய சுற்றிவளைப்பில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

யாழ் நகரில் அதிரடி கைதான பாடசாலை மாணவன் ; சுற்றிவளைப்பில் அம்பலமான விடயம் | School Student Arrested In A Raid In Jaffna City

ஐஸ் போதைப் பொருளுடன் நான்கு பேரும் போதை மாத்திரைகளுடன் ஐந்து பேரும் கேரள கஞ்சாவுடன் ஒருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.