அரச நிறுவனங்களில் ஏற்படவுள்ள மாற்றம் : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

அரச நிறுவனங்களில் ஏற்படவுள்ள மாற்றம் : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

நாட்டிலுள்ள பல அரச நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர் சபைகள் மற்றும் நிறுவனத் தலைவர்களை விரைவில் மாற்றுவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பின் போதே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அத்துடன் முன்மொழியப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் குறித்து அரசாங்கம் தற்போது விரிவான ஆலோசனைகளை முன்னெடுத்து வருகின்றதாகவும் சுட்டிக்காட்டினார்.

அரச நிறுவனங்களின் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரச நிறுவனங்களில் ஏற்படவுள்ள மாற்றம் : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு | Heads Of Government Offices To Be Replaced Soon

இந்தநிலையில் புதிய நியமனங்கள் குறித்த விபரங்கள் மிக விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அமைச்சர்  குறிப்பிட்டார்.

நிர்வாகக் கட்டமைப்பை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமையவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.