தசுன் அதிரடி ஆட்டம்..! மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 195 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!
சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச டி20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி இலக்காக 195 ஓட்டங்களை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.
இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களைக் குவித்தது.
இலங்கை அணி சார்பில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய தசுன் ஷானக 58 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். அவரது இந்த அதிரடி இன்னிங்ஸில் 4 ஆறு ஓட்டங்கள் மற்றும் 5 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கியிருந்தன.
மறுமுனையில் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய கமில் மிஷார ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
இதுதவிர, அணித்தலைவர் குசல் மெந்திஸ் 31 ஓட்டங்களையும், கமிந்து மெந்திஸ் 24 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு வலுச்சேர்த்தனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் Matthew Forde மற்றும் Shamar Joseph ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.