டீசலுக்கு 100 ரூபாய் வரை மானியம் : அரச தரப்பு அறிவிப்பு

டீசலுக்கு 100 ரூபாய் வரை மானியம் : அரச தரப்பு அறிவிப்பு

செப்டெம்பர் மாத இறுதியில் இருந்து ஒரு லீற்றர் டீசலுக்கு 80 முதல் 100 ரூபாய் வரை மானியம் வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மானியம் தொடர்பில் அமைச்சர் கருத்து வெளியிடும்போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் விற்பனை மூலம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட எரிபொருள் விற்பனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்த தரவுகள் கோரப்பட்டுள்ளன.

 

எரிபொருள் விலை திருத்தம்

அந்தத் தரவுகளை ஆய்வு செய்த பின்னரே துல்லியமான மானியத்தொகை தீர்மானிக்கப்படும். இந்த மாத இறுதியில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

டீசலுக்கு 100 ரூபாய் வரை மானியம் : அரச தரப்பு அறிவிப்பு | A Subsidy Of 80 To 100 Rupees Per Litre Of Diesel

இந்த நிலையில், தற்போதைய விலைகளைத் தக்கவைப்பதிலும் டீசல் விலையை உயர்த்துவதைத் தவிர்ப்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.” என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.