இலங்கைக்கு சுற்றுலா வந்த ஜேர்மன் நாட்டவருக்கு நேர்ந்த விபரீதம்
அளுத்கம, களுவாமோதர கடற்கரையில் நீராடச் சென்ற ஜெர்மன் சுற்றுலாப் பயணி ஒருவர் நேற்று (10) நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.
களுவாமோதரவில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த ஜெர்மன் நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரே இதன் போது உயிரிழந்தார்.

நேற்று மாலை களுவாமோதர கடற்கரையில் நீராடச் சென்ற அவர் திடீரென நீரில் மூழ்கியுள்ளார் இதைக் கண்ட மற்ற வெளிநாட்டினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரை மீட்டுள்ளனர்.
பின்னர் அவர் பேருவளை வைத்தியசாலையி்ல் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.