முடிவில் மாற்றம் இல்லை - மக்களின் ஆணையுடன் சட்டமாக மாறுகிறது கருணைக் கொலை

முடிவில் மாற்றம் இல்லை - மக்களின் ஆணையுடன் சட்டமாக மாறுகிறது கருணைக் கொலை

கருணை கொலையினை சட்டபூர்வமாக அங்கிகரிக்க நியூசிலாந்து நாடாளுமன்றம் அனுமதியளித்துள்ளது.

பல வருட காலமாக உணர்ச்சிகரமான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்ற நிலையில், இந்த விடயத்திற்கான பொது மக்களின் கருத்து கணிப்பு கடந்த ஒக்டோபர் மாதத்தில் நடைபெற்றது.

இந்த வாக்கெடுப்பில் 65.2 சதவீதமானவர்கள் கருணை கொலைக்கு தமது அங்கிகாரத்தை வழங்கியுள்ளனர்.

கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் அஞ்சல் மற்றும் வெளிநாடுகளில் வாழும் சுமார் 4 இலட்சத்து 80 ஆயிரம் வாக்குகளின் பெறுபேறுகள் அடுத்த வெள்ளிக்கிழமை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், உறுதியான வாக்குகள் ஏற்கனவே பதிவாகியுள்ளமையினால், இந்த வாக்காளர்களினால், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட முடிவில் மாற்றம் எதுவும் ஏற்படப்போவதில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்து நாடாளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருணை கொலை தொடர்பான சட்டம் அடுத்த வருடம் நவம்பர் மாதம் முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நெதர்லாந்து, கனடா உட்பட மிக சிறிய எண்ணிக்கையிலான நாடுகளில் கருணை கொலை சட்டபூர்வமாக்கப்பட்டு தற்போது அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.