
மற்றுமொரு மாநிலத்தில் பிடனுக்கு அமோக வெற்றி! பின்தங்கிய நிலையில் ட்ரம்ப்
ஜோர்ஜியா மாநிலத்தில் ஜோ பிடன் 24,49,580 வாக்குகள் பெற்று டொனால்ட் ட்ரம்பை விட 1096 வாக்குகளால் முன்னிலை பெற்றுள்ளார்.
அதிபர் ட்ரம்ப் 24,48,484 வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளதாக தற்போதைய தகவல் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த அதிபர் தேர்தலை தொடர்ந்து தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
சமீபத்திய தரவுகளின்படி, பிடன் 264 தேர்தல் வாக்குகளையும், டொனால்ட் ட்ரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
பிடனுக்கு 50.4 சதவீத வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், சமீபத்திய கணிப்புகளின் படி ட்ரம்பிற்கு 47.9 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், முன்னாள் துணை ஜனாதிபதி பிடன் இப்போது அமெரிக்காவின் 46ஆவது அதிபராவதற்கு இன்னும் ஆறு வாக்குகள் மட்டுமே தேவைப்படுகிறது.
தற்போது மறுதேர்தலைக் கோரும் ட்ரம்ப், 50 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.
அமெரிக்க தேர்தலின் இறுதி முடிவுகள் அலாஸ்கா (3), ஜோர்ஜியா (16), நெவாடா (6), வட கரோலினா (15) மற்றும் பென்சில்வேனியா (20) ஆகிய ஐந்து மாநிலங்களின் முடிவுகளின் முடிவைப் பொறுத்தே அமையவுள்ளது.