இங்கிலாந்தில் துணிச்சலாக செயற்பட்ட பெண்ணால் காப்பாற்றப்பட்ட சிறுமி

இங்கிலாந்தில் துணிச்சலாக செயற்பட்ட பெண்ணால் காப்பாற்றப்பட்ட சிறுமி

இங்கிலாந்தில் சிறுமியை இளைஞர் ஒருவர் கடத்த முயன்றவேளை அவரிடம் இருந்து துணிந்து செயல்பட்டு காப்பாற்றியுள்ளார் பெண்ணொருவர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

இங்கிலாந்து தலைநகரான லண்டனில் கடந்த சனிக்கிழமை காலை 7 மணியளவில் ஒரு இளைஞர், ஒரு சிறுமியை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்வது போல தோன்ற அங்கிருந்த பெண் ஒருவர் சந்தேகப்பட்டு அவரை வீடியோ எடுத்துள்ளார்.

மேலும் அருகே சென்று அந்த இளைஞனிடம் நீங்கள் யார், சிறுமி யாருடையது எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த இளைஞனோ எனது உறவினரின் சிறுமிதான் என சொல்ல சந்தேகமடைந்த பெண் சிறுமியிடம் விசாரித்துள்ளார்.

அதனால் பயந்த இளைஞர் சிறுமியை விட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். அதன் பிறகு சிறுமி அழுதுகொண்டே தன்னைக் காப்பாற்றியதற்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அந்த பெண் தான் எடுத்த வீடியோவை பொலிஸாரிடம் ஒப்படைக்க பொலிஸார் அதிலிருந்த புகைப்படத்தை வெளியிட்டு இப்போது அந்த இளைஞரைக் கைது செய்துள்ளனர். விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் கேடியன் நெல்சன் எனக் கண்டறியப்பட்டுள்ளது.