உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, ப்ரென்ட் வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை குறைந்த எல்லையாக 40 டொலர்களாக காணப்பட்டிருந்தது.

எனினும் அது 39 டொலர்கள் 45 சதத்தில் இறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை உலகளாவிய ரீதியில் கட்டுப்பாடுகள் இன்னும் தொடர்வதாலும், எண்ணெய் நுகர்வு குறைவும் இதற்கு ஒரு காரணம் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.