அமெரிக்காவின் புதிய அதிபருக்கு கோட்டாபய அனுப்பிய செய்தி!

அமெரிக்காவின் புதிய அதிபருக்கு கோட்டாபய அனுப்பிய செய்தி!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியீட்டியுள்ள ஜனாநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடனுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வரலாற்று ரீதியான வெற்றிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள நெருங்கிச் செயற்பட விரும்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் அமெரிக்காவில் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் வெளியான முடிவுகளின் ஜோ பிடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.