தேர்தலில் தோல்வியடைந்த ட்ரம்ப் - அதே நாளில் சிலையானார்!

தேர்தலில் தோல்வியடைந்த ட்ரம்ப் - அதே நாளில் சிலையானார்!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்த அதே நாளில் அவரின் வடிவையொத்த புதிய மெழுகுச் சிலையொன்று பிரித்தானியாவில் வைக்கப்பட்டுள்ளது.

லண்டனிலுள்ள மேடம் டூசாட் அருங்காட்சியகத்தில் குறித்த மெழுகுச் சிலையானது வைக்கப்பட்டுள்ளது.

இந்த மெழுகுச் சிலையானது ட்ரம்ப், கோல்ப் விளையாடும் ஆடையில் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், சீன ஜனாதிபதி ஜீ ஜின் பிங் ஆகியோரின் சிலைகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.